×

இலவச வீடு கட்டித்தருவதாக மோசடி பாதிரியாருக்கு 4 ஆண்டு சிறை: குடியாத்தம் கோர்ட் தீர்ப்பு

குடியாத்தம்:.  வேலூர் மாவட்டம், அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் யோபு சரவணன், பாதிரியார். இவர் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். கடந்த 2005ம் ஆண்டு அறக்கட்டளை மூலம் வீடுகள் கட்டித்தருவதாக விளம்பரம் செய்தார். இதனை கண்ட குடியாத்தம் அசோக்நகரை சேர்ந்த ராஜேந்திரன், நடுப்பேட்ைடயை சேர்ந்த தயாளன் ஆகியோர், அப்பகுதியினரிடம் வசூலித்து கடந்த 2005 அக்டோபர் மாதம் 4 லட்சத்தை யோபு சரவணனிடம் கொடுத்துள்ளனர். ஆனால், அவர் வீடு கட்டி தராமல் காலம் கடத்தியுள்ளார். பணத்தை திருப்பிக்கேட்டபோது 2006ல் யோபு சரவணன் கொடுத்த 4 லட்சத்திற்கான காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டது. இதுபற்றி ராஜேந்திரன், தயாளன் ஆகியோர் 2007ல் குடியாத்தம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்லபாண்டியன், யோபு சரவணனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், இதேபோல், குடியாத்தம் பகுதியை சேர்ந்த பாண்டியன், வாசு, ஆனந்தன் ஆகியோரிடம் வீடு கட்டித்தருவதாக ரூ.4 லட்சம் ஏமாறற்ிய வழக்கிலும் 2 ஆண்டு சிறை, சம்பந்தப்பட்டவர்களுக்கு 8 லட்சம் திருப்பி தர வேண்டும், தவறும் பட்சத்தில் மேலும் 6 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags : jail ,house ,priest , Free House, Fraud, Priests, Prison, Settlement Court Decree
× RELATED டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்: போலீஸ் விசாரணை