×

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக செங்கனூர் ரயில் நிலையத்தில் ‘வாடகை பைக் திட்டம்’

திருவனந்தபுரம்: சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக செங்கனூரில் இருந்து பைக் வாடகைக்கு விடும் திட்டத்தை தெற்கு ரயில்வே துவங்கியுள்ளது. சபரிமலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் தினமும் ஏராளம் பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக ரயில்வே சார்பில் பல்வேறு  நடவடிக்கைகள் ேமற்கொள்ளப்படுகிறது. சபரிமலை மண்டல- மகரவிளக்கு காலங்களில் சென்னை, விசாகபட்டினம், ஐதராபாத், பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயிலில் வரும் பக்தர்கள் பெரும்பாலும் செங்கனூர் ரயில்நிலையத்தில் இறங்கி பஸ்கள் மற்றும் கார், வேன்களில் சபரிமலை செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வசதிக்காக ெசங்கனூரில் இருந்து சபரிமலைக்கு மோட்டார் பைக்குகளை வாடகைக்கு விடும் திட்டத்தை ரயில்வே அறிமுகப் படுத்தியுள்ளது.

இதற்காக கொச்சியை சேர்ந்த ‘கபே ரைட்ஸ்’ என்ற பைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. செங்கனூர் வந்து இறங்கும் பக்தர்களுக்கு 500 சிசி புல்லட் பைக் வாடகைக்கு விடப்படும். இதில் 2 பேர் பயணம் செய்யலாம். ஒருவருக்கு ெஹல்மெட் வழங்கப்படும். ஒரு நாளைக்கு ₹1200 வாடகை கட்டணமாகும். இதில் 200 கி.மீட்டர் பயணிக்கலாம். கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீட்டருக்கும் தலா ₹6 ரூபாய் வசூலிக்கப்படும். பைக்கை கொடுக்கும் போது முழு டேங்க் பெட்ரோல்  நிரப்பி கொடுக்கப்படும். திருப்பி கொடுக்கும் போதும் அதுபோல் பெட்ரோல்  நிரப்பி கொடுக்க வேண்டும். இதற்கு ஆதார் கார்டு மட்டும் கொடுத்தால் போதும். மண்டல, மகரவிளக்கு சீசன் நேரத்தில் மட்டுமே இந்த வசதி வழங்கப்படும்.

Tags : Devotees ,Sabarimala ,Chengannur Railway Station , Sabarimala, Chengannur Railway Station
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...