×

சாலை விபத்தில் 15 ஆயிரம் பேர் பலி எதிரொலி தமிழகத்திலும் வருகிறது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை

சென்னை: விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக சிகிச்சைக்கு கொண்டுசெல்ல அரசு மருத்துவமனைகளில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க பொதுப்பணித்துறை சார்பில் தமிழக அரசிடம் நிதி கேட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வண்ணம் உள்ளது. குறிப்பாக, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதது, தரமற்ற சாலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விபத்துக்கள் நடக்கிறது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல முடியாததால் அவர்களின் உயிரிழப்பை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்காக, நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டது. அதில், தேசிய நெடுஞ்சாலைகளில் 110 இடங்கள் அதிக விபத்து ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டது. அந்த இடங்களின் அருகே அதி தீவிர சிகிச்சை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை அவசரமாக கொண்டு வரும் வகையில் வெளிநாடுகளில் இருப்பதை போன்று தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தலைமை அரசு மருத்துவமனைகளில் 30 மீட்டர் நீளம் 15 மீட்டர் அகலத்தில் ₹10 லட்சம் செலவில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படவிருக்கிறது. இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லண்டன் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அங்கு சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கேட்டறிந்தார். அதன்பேரிலேயே தமிழகத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது இதற்காக நிதிக்கேட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் நிதி கிடைத்தவுடன் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படுகிறது. தற்போது கட்டப்படவுள்ள 6 மருத்துவக்கல்லூரிகளில் இந்த ஹெலிகாப்டர் இறங்குதளத்துடன் அமைக்கப்படவிருக்கிறது’ என்றார்.

Tags : Tamil Nadu ,road accidents , 15 thousand people killed , road accidents , Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...