×

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்

பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவைலட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதிக செயல்திறன்மிக்க இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இது வந்துள்ளது. இந்த பைக் 0-60 கி.மீ வேகத்தை 2.9 வினாடிகளிலும், 0-100 கி.மீ வேகத்தை 7.2 வினாடிகளிலும் கடக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 147 கி.மீ வேகம் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும் வந்துள்ளது. இந்த பைக்கில் 4.2 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் பிடிக்கும். பாஸ்ட் சார்ஜர் மூலமாக 1.5 மணி நேரத்தில் முழுமயைாக சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ முதல் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் மூன்று தொகுப்புகளாக பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுப்புகளும் ஒரே நேரத்தில் இயங்கும் அவசியமில்லை. ஆனால், அனைத்தும் சேர்ந்து இயங்கும்போது அதிகபட்ச செயல்திறனை பெற முடியும்.

இந்த பைக்கில் ஸ்டீல் டிரெல்லிஸ் வகை பிரேம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் அப்சைடு டவுன்அப் போர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 320 மி.மீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மி.மீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இப்புதிய பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் முன்புறத்தில் 110/70-R17 அளவுடைய டயரும், பின்புறத்தில் 150/60-R17 டயரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக் 158 கிலோ எடை கொண்டது.
இந்த பைக்கில் டிஎப்டி திரையுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கிற்கு பேனியர்கள், போர்ட்டபிள் பாஸ்ட் சார்ஜர் மற்றும் கிராஷ் கார்டுகள் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீகளும் வழங்கப்படுகின்றன. 3 லட்சம் முதல் 3.25 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பெங்களூரில் விற்பனைக்கு வருகிறது.

Tags : India , India's first, electric sports bike
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!