×

ஏமனில் கொத்தடிமைகளாக இருந்த 9 மீனவர்கள்: படகு மூலம் தப்பியவர்களை கல்பெனித் தீவில் கண்டுபிடித்தது கடலோர காவல்படை

குமரி: ஏமன் நாட்டில் இருந்து தப்பிய 9 மீனவர்கள் கொச்சி அருகே கல்பெனித் தீவு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் கொத்தடிமைகளாக இருந்த இந்திய மீனவர்கள் 9 பேர் அங்கிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை மீட்கும் பணியில் டார்னியா விமானம் மற்றும் கடலோர கப்பல் படை ஈடுபட்டுள்ளது. 9 மீனவர்களில் 6 பேர் குமரியையும், ஒருவர் நெல்லையையும் மற்றும் 3 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மயமான மீனவர்களின் கதி என்ன ஆனது?, அவர்களை எங்கு இருக்கிறார்கள் என தெரியாமல் உறவினர்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் மீனவர்களை மீட்கக்கோரி நேற்றைய தினம் குமரியில் உள்ள அதிகாரிகளை சந்தித்து அவர்களிடம் முறையிட்டனர்.

இதையடுத்து, கடலோர காவல் படையினர் மற்றும் கடலோர காவல்படை கப்பல், அதேபோன்று கடலோர காவல்படை விமானம் போன்றவை மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டது. இந்த தேடுதலை தொடர்ந்து, அந்த 9 மீனவர்களும் எங்கு உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஏமனில் இருந்து படகு மூலம் தப்பிய அவர்கள் 3,000 கி.மீ தூரம் கடலில் பயணித்து தற்போது கல்பெனித் தீவு அருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தீவு இந்திய துறைமுகத்தில் இருந்து 218 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும், அந்த இடத்தில் ஒரு படகில் மீனவர்கள் இருப்பதை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்து தகவல் அளித்துள்ளனர். தற்போது, அந்த தீவிற்கு கடலோர காவல்படையின் விமானம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. பிராந்திய விமானமும் அந்த படகில் மீனவர்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது. மீனவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படையின் ஆரியமேன் என்ற கப்பல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 9 மீனவர்களும் பத்திரமாக இருப்பதால் அவர்களது உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கொத்தடிமைகளாக இருந்த மீனவர்கள்:

9 மீனவர்களும் ஏமனில் சுல்தான் என்பவரிடம் கொத்தடிமைகளாக வேலை பார்த்ததாக தகவல் வெளியானது. உணவு, சம்பளம் தராமல் இரவு பகலாக மீன்பிடித்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

10 நாட்கள் கடல் பயணம்:


மீனவர்கள் 9 பேரும் சுல்தானின் படகு மூலம் ஏமனில் இருந்து தப்பி 10 நாட்களுக்கு பின் இந்திய எல்லையை வந்தடைந்துள்ளனர். சுமார் 3,000 கி.மீ பயணம் செய்து தப்பியுள்ள மீனவர்களை இந்திய கடலோர கப்பல் படை கைது செய்யக்கூடாது என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : fishermen ,Yemen ,island ,Coast Guard , Yemen, Indian fishermen, masonry, discovery, Kalpenith island
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...