×

அரசியல் சாசன தினத்தன்று கிடைத்த மிகப்பெரிய வெற்றி தான் மகாராஷ்டிரா நிகழ்வு குறித்து என ப.சிதம்பரம் கருத்து

டெல்லி: அரசியல் சாசன தினத்தன்று கிடைத்த மிகப்பெரிய வெற்றி தான் மகாராஷ்டிரா நிகழ்வு குறித்து என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வரும் டிசம்பர் 11ம் தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்து  உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரம் கூறியதாவது: மகாராஷ்டிராவில் நள்ளிரவில் நடத்தப்பட்ட அரசியல் சாசன குளறுபடிகளுக்கு பிரதமர், குடியரசு தலைவர், ஆளுநர்  உட்பட அனைவரும்தான் பொறுப்பு என டெல்லி சிபிஐ நீதிமன்ற வளாகத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே  சிறையில் இருப்பினும் குடும்ப உறுப்பினர்களின் உதவியோடு அவ்வப்போது ட்விட்டரில் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மகாராஷ்டிரா அரசியல் நிகழ்வுகளை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், 2019 அரசியலமைப்புச் சட்ட நாளில் நவம்பர் 23-ம் தேதி முதல் 26-ம் தேதிக்கு இடையே நடந்த அதிர்ச்சி தரக்கூடிய அரசியலமைப்புச் சட்ட விதிமுறை மீறல்தான் நம்முடைய நினைவில் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

Tags : P. Chidambaram ,victory ,Maharashtra ,Political Charter Day ,Maharashtra Event , Political Charter Day, Biggest Win, Maharashtra Event, P. Chidambaram, Opinion
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்