×

ஆண்களை விட பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை 8% அதிகரிப்பு : தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை

டெல்லி : 15 முதல் 29 வயதுடையவர்களின் வேலைவாய்ப்பின்மை 22.5 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.வேலைவாய்ப்பின்மை குறித்த புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் 2018-2019ம் ஆண்டின் 4வது காலாண்டில் இரு பாலினத்தவருக்குமான வேலைவாய்ப்பின்மை 29% ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆண்களை விட பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை 8% அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலங்களில் 15 முதல் 29 வயதுடையவர்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பின்மை 29% ஆகவும் ஆண்களுக்கான வேலைவாய்ப்பின்மை 20.9% ஆகவும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அனைத்து வயதுடையவர்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பின்மை 11.6 % ஆண்களுக்கான வேலைவாய்ப்பின்மை 8.7%ஆகவும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகமுள்ள மாநிலங்களில் 37.2% கேரளா முதலிடத்திலும் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் 34.1% 2ம் இடத்திலும் ஒடிசா 33.8% 3ம் இடத்திலும் உள்ளன. அதே போல் பஞ்சாப் மாநிலம் 17.3%, கர்நாடகா 12.3, குஜராத் 9.5% வேலைவாய்ப்பின்மையுடன் கடைசி 3 இடத்தில் உள்ளது.


Tags : National Bureau of Statistics ,females ,males , Office of National Statistics, Unemployment, Men and Women
× RELATED தேர்தலில் போட்டியிடும்...