×

மீன்பிடி தொழிலுக்கு சென்று வந்த பிறகே வங்கி கணக்கில் மானியதொகை செலுத்தும் நடைமுறை அறிமுகம்

* மீனவர்கள் எதிர்ப்பு * ஸ்மார்ட் கார்டு பெற மறுப்பு

சென்னை: மீன்பிடித் தொழிலுக்கு சென்று வந்த பிறகே மானியதொகை வங்கி கணக்கில் ெசலுத்தும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்வதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீனவர்கள் விசைபடகு, நாட்டுப்படகு மூலம் மீன்பிடித்து வருகின்றனர். இதற்காக ஒரு மாதத்துக்கு 20 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஆனால், அரசு ஒரு படகுக்கு ஆண்டுக்கு ₹18 ஆயிரம் மற்றும் இயந்திர மயமாக்கப்பட்ட  நாட்டுப்படகுகளுக்கு ₹4 ஆயிரம் என டீசலுக்கு மானியம் தருகிறது. இதைகூட மீன்வளர்ச்சி கழகத்தில் சார்பில் நடத்தப்படும் நிலையங்களில் டீசல்களை மீனவர்கள் பெற்று வருகின்றனர். இந்த மானிய விலை டீசல் மீனவர்கள் கடலுக்கு  செல்வதற்கு முன்பே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மானிய விலையில் டீசல் வழங்குவதற்கு பதிலாக பணமாக படகு உரிமையாளர் வங்கிகணக்கில் வரவு வைக்கும் புதிய நடைமுறையை கொண்டு வர முடிவு செய்தது. இந்த முறையின் படி டீசலுக்கான முழுத் தொகையை  செலுத்தி, ஒவ்வொரு முறை மீன்பிடித் தொழிலுக்கு சென்று வந்த பிறகே, உரிமையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இதன் மூலம்  விசைப்படகு உரிமையாளர்கள் டீசல் வாங்க மாதம் ஒன்றிற்கு கூடுதலாக சுமார் 4 லட்சம் முதல் ₹5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற வேண்டிய சூழல் ஏற்படும். இந்த புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்மார்ட் கார்டு  பெற மீனவர்கள் மறுத்து விட்டனர். இது குறித்து தென்னிந்திய மீனவர் நலச் சங்க தலைவர் பாரதி கூறியதாவது:தமிழக அரசு வழங்கக் கூடிய மானியமும், நிவாரணங்களும் மீன்பிடித்தொழிலை ஊக்குவிக்க இருக்க வேண்டுமே தவிர, ஒரங்கட்டுவதற்காக இருக்கக்கூடாது. ஒரு  மாதம் கழித்து விசைப்படகு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் மானியத்தொகையால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.எனவே, ஸ்மார்ட் கார்டு மூலம் மீன்வளத்துறையின் அங்கீகரிக்கப்பட்ட டீசல் நிலையங்களில் மட்டுமே டீசல் பெற வேண்டும். மொத்தத்தில் மீனவர்கள் மீன்பிடித்தொழிலுக்கு செல்வதை விட மானியத்திற்காக டீசல் வாங்க மீன்வளத் துறையால்  அங்கீகரிக்கப்பட்ட டீசல் நிலையத்திற்கு நேரில் செல்வதற்கு இனி அதிக நேரத்தை செலவிட வேண்டும். அதற்காக ஆகும் போக்குவரத்து செலவையும் கணக்கு போட்டு பார்த்தால் அரசு வழங்கும் மானியத்திற்கு மேலே செலவு செய்ய வேண்டும்.டீசல் பெறுவதில் தவறு நடைபெறுகிறது என்றால் தவறை சரி செய்ய வேண்டுமே தவிர,பயனாளிகளுக்கு தண்டனை வழங்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Introduction ,Bank Account Introduction ,fishing Introduction , went, fishing, Bank Account, Payment Procedure
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...