×

வங்கியில் மாதந்தோறும் வந்த பணத்தால் வாலிபர் ஜாலி ஐயா... மோடி போட்ட பணம்னு நினைச்சி காலி பண்ணிட்டேன்: ஒரே கணக்கு எண், பெயரால் நடந்த குளறுபடி

போபால்: தனது வங்கி கணக்குக்கு மாத, மாதம் மர்மமான முறையில் வந்த பணத்தில், ஒருவர் ரூ.89 ஆயிரம் எடுத்து ஜாலியாக செலவு செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசம், பிந்த் மாவட்டம் ரோணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹகும் சிங்.  இவர் அலம்பூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளார். இந்த கணக்கில் இவர் பணம் எதுவும் போடாமலே, மாத மாதம் பல ஆயிரம் கிரெடிட் ஆனது. இதனால் மகிழ்ச்சியடைந்த ஹகும் சிங், அந்தப் பணத்தை எடுத்து ஜாலியாக செலவு செய்து வந்தார். கடந்த 6 மாதத்தில் அவர் ரூ.89 ஆயிரம் பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார். இந்நிலையில் மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டத்தின் ரூராய் கிராமத்தைச் சேர்ந்த ஹகும் சிங் என்பவர், தனது வங்கி கணக்கில் கடந்த 6 மாதமாக போட்ட சேமிப்பு பணம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் இருக்க வேண்டும்.

ஆனால் ரூ.35,400தான் உள்ளது என அலம்பூர் எஸ்பிஐ வங்கியில் புகார் அளித்தார். இவர் மத்தியப் பிரதேசத்தில் வங்கி கணக்கு தொடங்கியபின், வேலை செய்வதற்காக அரியானா சென்று விட்டார். மாத மாதம் சம்பாதித்த பணத்தை வங்கி கணக்கில் போட்டுவிட்டு, அதை இவர் கடந்த 6 மாதமாக சரிபார்க்கவில்லை.  இந்த புகார் குறித்து வங்கி அதிகாரிகள் சோதனை செய்த போது, ஒரே சேமிப்பு கணக்கு எண்ணை, ஹகும் சிங் என்ற பெயரில் வங்கி கணக்கு தொடங்கிய இருவருக்கு வங்கி மேலாளர் ஒதுக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரோணி கிராமத்தைச் சேர்ந்த ஹகும் சிங் என்பவரை வங்கி அதிகாரிகள் வரவழைத்து விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், ‘‘கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் போடுவேன் என தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்களித்திருந்தார்.

அதனால்தான், தனது வங்கி கணக்கில் மாத மாதம் பணம் போடப்படுகிறது என நினைத்து நான் பணத்தை எடுத்து செலவு செய்தேன்,’’ என்றார்.  ஒரே பெயரில் வங்கி கணக்கு தொடங்கிய இருவருக்கு, ஒரே சேமிப்பு கணக்கு எண்-ஐ தவறாக ஒதுக்கீடு செய்ததை வங்கி அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். ரூ.89 ஆயிரம் செலவழித்த ஹகும் சிங்கிடம் இருந்து பணத்தை மீட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வழி குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Tags : sir ,plaintiff ,Modi ,bank ,panamnu ,men , The plaintiff, Modi, is the only account number
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...