×

பாஸ்டேக் இல்லாவிட்டால் சுங்கச்சாவடி கட்டணம் டிச.1 முதல் இரட்டிப்பு: நிதின் கட்கரி எச்சரிக்கை

புதுடெல்லி: பாஸ்டேக் பொருத்தாவிட்டால் டிசம்பர் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் அபராதமாக இரட்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.  டிசம்பர் 1 வரை பாஸ்டேக் இலவசமாக வழங்கப்படும் என நிதின் கட்கரி தெரிவித்தார்.சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, பாஸ்டேக் கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டது. பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்த தனி வழி உள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் ரொக்கமாக வசூலிக்கப்படுகிறது. அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிசம்பர் 1ம் தேதி முதல் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவதை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:  நாடு முழுவதும் 537 சுங்கச்சாவடிகள் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கும் மின்னணு சாவடிகளாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றில் 17 சாவடிகளில் பாஸ்டேக்கில் இருந்து கையடக்க கருவி மூலம் வசூலிக்கப்படுகிறது.

வரும் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து பாஸ்டேக் மூலமாக மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. பாஸ்டேக் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டிசம்பர் 1ம் தேதி வரை 150 செக்யூரிடி டெபாசிட்டுக்கு  இலவசமாக பாஸ்டேக் கருவியை வழங்கும். விரும்புபவர்கள் இதை பணம் கொடுத்தும் வாங்கிக் கொள்ளலாம். டிசம்பர் 1க்கு பிறகு இவற்றை பணம் செலுத்தி வாங்க வேண்டும்.  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆண்டு வருவாய் அடுத்த 5 ஆண்டுகளில் லட்சம் கோடியை எட்டும். அடுத்த 2 ஆண்டுகளில் 30,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

தமிழகத்தில் பாதி வாகனத்துக்கு இல்லை
தமிழகத்தில் சுமார் 2,900 கி.மீ. சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளது. 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 482 பாதைகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கும் பணி ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது. ரொக்கமாக செலுத்த ஒரு பாதை மட்டுமே இருக்கும். தமிழகத்தில் சுமார் 40 சதவீதம் பேர்தான் பாஸ்டேக் வைத்துள்ளனர் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.



Tags : Nitin Gadkari , pastcake, Customs duty, Nitin Gadkari, warning
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி