×

வேலூர் சிறையில் முருகனை சந்திக்க நளினி, உறவினர்களுக்கு அனுமதி

சென்னை:  ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை தனிமை சிறையில் இருந்து  அவரை சாதாரண சிறைக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி அவரது உறவினர் தேன்மொழி சென்னை உயர்  நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, சிறை துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை  குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், பதில் மனு தாக்கல் செய்தார்.

  இதையடுத்து, முருகனுக்கு வழங்கப்பட்டுள்ள 3 மாத தண்டனையை திரும்ப பெற சிறை துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முருகன் அவரது மனைவி மற்றும் உறவினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.  மேலும்,  முருகனை வேறு பிளாக்கிற்கு மாற்றியது தொடர்பான நிர்வாக உத்தரவில் தலையிட முடியாது என்றனர்.Tags : relatives ,Nalini ,jail ,Murugan ,Vellore ,Vellore Jail , Nalini, relatives , meet, Murugan , Vellore, jail
× RELATED சிறையில் உள்ள நளினி, முருகன்...