×

தெலங்கானா மாநிலத்தில் 100 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 பறிமுதல்: கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் 100 கோடி மதிப்புள்ள. பழைய 500, 1000 நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம், சத்திப்பல்லி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் ஒரு கும்பல் 80 லட்சம் கொடுத்தால் 1 கோடி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர். இது குறித்து கம்மம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சத்திப்பல்லியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஏமாற்றி கள்ளநோட்டுக்களை மாற்ற ஒரு மர்ம ஆசாமி முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சத்திப்பல்லியை சேர்ந்த மாதர் என்பதும் இவரது தலைமையிலான கும்பல் இந்த மோசடியில் ஈடுபடுவதும் தெரியவந்தது. மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் அங்குள்ள ஒரு வீட்டை போலீசார் சோதனை செய்தனர்.

அங்கிருந்து 7 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் கள்ளநோட்டுக்களை  பறிமுதல் செய்தனர். மேலும், கள்ள நோட்டுக்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் பல்வேறு பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக மாதர் தலைமையிலான கும்பலைச் சேர்ந்த வெங்கட்நாராயணா, ஆனந்த் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கம்மம் மாவட்டம், மன்சூரு மண்டலத்தில் உள்ள வீட்டில் 100 கோடியிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500, 1000 நோட்டுக்களை ஏற்கனவே அச்சிட்டு  பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அங்கிருந்த கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.


Tags : state ,Telangana , Telangana State, Old 500,1000, Arrested
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து