ஸ்மார்ட் சிட்டியில் இன்று முதல் ஒரு வழிப்பாதை: போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு

சென்னை: தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி நேற்று தொடங்கப்பட்டதை ஒட்டி இன்று முதல் அப்பகுதியில் ஒரு வழிபாதையாக மாற்றி போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் ேநற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லைக்கு உட்பட்ட தி.நகர் சாலையில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் நேற்று சீர்மிகு நகர திட்டம் (ஸ்மார்ட் சிட்டி) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் தொடர்பான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளதின் அடிப்படையில் தி.நகர் சாலையில் இன்று (14.11.2019) முதல் நடைமுறையில் உள்ள இருவழி பாதை போக்குவரத்தினை ஒருவழி பாதையாக மாற்றி கீழ்கண்டவாறு போக்குவரத்துக்கு மாற்றம் அமல்படுத்தப்படுகிறது.

 * அண்ணாசாலையில் இருந்து பனகல் பார்க் நோக்கி செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை சந்திப்பு வரை மட்டும் அனுமதிக்கப்படும்.
* பனகல் பார்க் செல்ல விரும்பும் வாகனங்கள், தணிகாசலம் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி, தணிகாசலம் சாலை வழியாக சென்று, வெங்கட்நாராயணா சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி பனகல் பார்க் நோக்கி செல்லலாம்.* பனகல் பார்க்கிலிருந்து அண்ணாசாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் பிரகாசம் சாலை. ஜி.என்.செட்டி சாலை சென்று, வாணிமகால் சந்திப்பில் வலது புறம் திரும்பி, டாக்டர் நாயர் சாலை வழியாக சென்று, தியாகராய சாலையில் இடது புறம் திரும்பி மா.பொ.சிவஞானம்  சிலை சந்திப்பு வழியாக அண்ணாசாலை செல்லலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Tags : Smart City , sidewalk , Smart City, traffic police ,notification
× RELATED ஸ்மார்ட் சிட்டி ரேங்க் கார்டு ஜூனில் வெளியாகிறது