அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விருது

சென்னை: அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.அரசு முறை பயணமாக, அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று சிகாகோவில் உள்ள மெடோவ்ஸ் கன்வென்சன் சென்டரில் `அமெரிக்க பல இன கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற `உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது-2019 விழாவில் `சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

விருது வழங்கிய குக் கன்ட்ரி தலைவர் டோனி பிரேக் விங்கிள், அமெரிக்க காங்கிரஸ்மேன் டேனி கே டேவிஸ், விருதினை தேர்வு செய்த நடுவர் செனோபியா சோவெல், இணை தலைவர் மார்ட்டினோ டேங்ஹர், இந்திய தூதரக அதிகாரி சுதாகர் தலேலா, தேனி எம்பி ரவீந்திரநாத்குமார், தமிழ்நாடு நிதி துறை அரசு முதன்மை செயலர் கிருஷ்ணன், உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் விஜய பிரபாகர் மற்றும் தமிழ் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>