சென்னை: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் சக்திவாய்ந்த பாத்திரத்தை பொதுமனிதனின் விவாதத்துக்கு எடுத்து வந்தவர் டி.என்.சேஷன். தைரியம் மற்றும் நம்பிக்கையின் உருவமாக நினைவுக்கூறப்படுபவர் டி.என்.சேஷன் எனவும் கமல்ஹாசன் புகழாரம் சூட்டினார்.