×

போக்குவரத்து சேவையினை மேம்படுத்தும் வகையில் அரசு 23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு முதல்கட்டமாக 100 ஏசி பஸ்கள் தயாரிப்பு: சாலை போக்குவரத்து நிறுவனம் திட்டம்

சென்னை:போக்குவரத்து சேவையினை மேம்படுத்தும் வகையில் 23 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் முதல்கட்டமாக 100 ஏசி பஸ்களை தயாரிப்பதற்கு, அரசின் சாலை போக்குவரத்து நிறுவனம்  திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக தினசரி நாள்தோறும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள்  இயக்கப்படுகின்றன. இதை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இதேபோல் அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் நீண்ட தூர போக்குவரத்து சேவையினை வழங்கி வருகிறது. நாள்தோறும் 251 வழித்தடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் மட்டும் அல்லாது, கர்நாடகா,  கேரளா, ஆந்திரா போன்ற இடங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. இவ்வாறு அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் பழையதை நீக்கிவிட்டு, புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1314 கோடி செலவில் 4381 பஸ்கள்  வாங்கப்பட்டு, பொதுமக்களின் சேவைக்காக விடப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் 2,213 புதிய பிஎஸ்-6 தரத்திலான பஸ்களும், 500 மின்சார பஸ்களும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் முன்ேனாட்டமாக ஒரு மின்சார பஸ் சென்னையில் இயக்கப்பட்டு  வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து மேம்பாட்டுக்காக சென்னை, தரமணியில் உள்ள சாலைபோக்குவரத்து நிறுவனத்துக்கு 23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் முதல்கட்டமாக 100 ஏசி பஸ்களை தயாரிக்க  திட்டமிட்டுள்ளது. முன்னதாக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய 100 பஸ்களை 19.50 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு போக்குவரத்துக்கழகங்களில் இயக்கப்படும் பஸ்கள் தொடர்ந்து நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக 100 ஏசி பஸ்கள் தயாரித்து இயக்கப்படவுள்ளது.  இதன்மூலம் ஏசி பஸ்களில் சேவை அதிகரிக்கப்படும். தனியாரால் இயக்கப்பட்டு வரும் ஏசி பஸ்களை விட, அரசின் பஸ்களில் கட்டணம் குறைவாகவுள்ளது.இதனால் பண்டிகை காலங்களில் பலரும் அரசின் ஏசி பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். இதை அதிகரிக்கச்செய்யும் வகையில் தற்போது புதிதாக 100 பஸ்கள் அறிமுகம் செய்யவுள்ளோம். இதேபோல் மாநகரப்போக்குவரத்துக்கழத்துக்கும்  விரைவில் ஏசி பஸ்கள் செயல்பாட்டுக்கு விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதற்கான நடவடிக்கைகளும் மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது ஏசி பஸ்கள்
அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் ஏசி படுக்கை வசதி கொண்ட பஸ்கள் சென்னையிலிருந்து பெங்களூரு, போடி, கோபி, கீழக்கரை, மதுரை, சேலம், சிவகாசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு 9 பஸ்கள்  இயக்கப்படுகின்றன. ஏசி படுக்கை மற்றும் சீட் வசதி கொண்ட பஸ்கள் சென்னை எழும்பூரில் இருந்து கரூருக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இதேபோல் ஏசி கண்டிஷன் பஸ்கள் சென்னை-கோவை, தர்மபுரி, கரூர், மதுரை, நாகர்கோவில்,  நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு என மொத்தம் 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது 100 பஸ்களை புதிதாக இணைப்பதன் மூலம் ஏசி பஸ்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

* இந்த பஸ்களில் குறைவான சத்தம் மட்டுமே வரும். இதனால் பஸ்களில் பயணிக்கும் ேபாது பயணிகளுக்கு இடையூறு இருக்காது.
* இரண்டு ஆபத்துகால வழி, சுமைகளை வைக்க அடுக்குகள்.
* பஸ்சின் தரைத்தளம் அகலமானதாகவும், நீளமானதாகவும் வடிவமைக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு கூடுதல் சவுகர்யத்தை கொடுக்கும்
* வீடியோ, ஆடியோ சிஸ்டம், ரூட் போர்டு, பார்க்கிங் லைட்,நடத்துனர் ரீடிங் லைட்.

Tags : Government ,phase ,AC , transport.service.llocated. first p. AC buses
× RELATED நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88...