×

மகாராஷ்டிராவில் தொடரும் அரசியல் திருப்பம்: தற்போதைய சூழலில் ஆட்சியமைக்க போவதில்லை என பாஜக அறிவிப்பு

மும்பை: மராட்டியத்தில் தற்போதைய சூழலில் ஆட்சியமைக்க போவதில்லை என்று மராட்டிய பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்துள்ளார். தற்போது தங்களால் ஆட்சியமைக்க முடியாது என மராட்டிய ஆளுநரிடம் தெரிவித்ததாக பாஜக மாநில தலைவர் விளக்கம் அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக இருந்த போதும் ஆட்சி அமைக்க முடியாது என ஆளுநர் கோஷ்யாரியின் அழைப்பை பாஜக நிராகரித்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களாகிவிட்டன. ஆனால் எந்த கட்சியுமே ஆட்சி அமைக்க முன்வரவில்லை. மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ., சிவசேனா இடையே இழுபறி ஏற்பட்டது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி மற்றும் ஆட்சியில் சம பங்கு என்பதில் அக்கட்சி உறுதியாக இருந்தது. இதனால், ஆட்சி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தேர்தலில், அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க வரும்படி பா.ஜ.,வுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக பட்னவிஸ் வீட்டில் ஆலோசனை நடந்தது.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், பெரும்பான்மைக்கான எண்ணிக்கை எங்களுக்கு இல்லை; அதனால் ஆட்சி அமைக்க இயலாது என ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறோம். தேர்தலில் பாஜக-சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்கத்தான் மக்கள் வாக்களித்தனர். இதனை மதிக்காமல் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்தால் எங்களது வாழ்த்துகள் என்றார்.

Tags : BJP ,Maharashtra , Maharashtra, Politics, BJP
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி