×

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 36,109 ஏக்கர் நிலங்களின் பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு

தேனி: மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஒருலட்சத்து 36ஆயிரத்து 109 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன வசதிக்காக இன்று வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வைகைஅணையில் இருந்து பூர்வீக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடும்படி கோரிக்கை விடுத்து வந்தனர். இதனடிப்படையில் தமிழக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தேனி ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் அணை நீரை திறந்துவிட்டார்.

பின்பு அவர் கூறியதாவது: மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பூர்வீக பாசன மூன்றாம் பகுதிக்கு வரும் 16-ம் தேதி வரை 7நாட்களுக்கு ஆயிரத்து 441 மில்லியன் கனஅடியும், இரண்டாம் பகுதிக்கு 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 386 மில்லியன் கனஅடியும், முதல் பகுதியைச் சேர்ந்த 4 கண்மாய்களுக்கு 22 முதல் 25ம் தேதி வரை 48மி.கனஅடி நீர் விரகனூர் மதகணையிலும் வழங்கப்படும். மேலும் வைகை பூர்வீக பாசன முதல் பகுதிக்கு 26ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை 240 மில்லியன் கனஅடி தண்ணீரும் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து வைகைஅணையில் இருந்து திறந்து விடப்படும்.

இதுன் மூலம் மூன்று மாவட்டங்களில் உள்ள ஒருலட்சத்து 36ஆயிரத்து 109 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள் நேரடி மற்றம் மறைமுக பாசன வசதி பெறும். எனவே விவசாயிகள் குறுகிய கால பயிர்களை நடவு செய்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெற வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் பொதுப்பணித்துறை (நீர் வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் செல்வம், குபேந்திரன், ஆனந்தன், கீழ் வைகை வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Irrigation facilities ,districts ,Ramanathapuram ,land ,Sivagangai ,Madurai , Madurai, Sivagangai, Ramanathapuram, Irrigation, Vaigai Dam
× RELATED அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!