×

ஆளுமைமிக்க, சரியான தலைமைக்கு தற்போதும் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது : நடிகர் ரஜினிகாந்த்

சென்னை : ஆளுமைமிக்க, சரியான தலைமைக்கு தற்போதும் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தனக்கு காவிச் சாயம் பூச முயற்சி நடைபெறுவதாக சற்று முன்பு கூறியிருந்த நிலையில் ரஜினி மீண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது குறிப்புகளாக பின்வருமாறு,

*நான் எப்போதும் வெளிப்படையாக பேசி வருகிறேன்.நான் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன்.

*திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன.

*அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும்.

*இந்திய பொருளாதாரம் மந்தமாகதான் உள்ளது; அதை மீட்க  என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டும்

Tags : Dikar Rajinikanth ,Tamil Nadu , Vacuum, actor Rajinikanth, Ayodhya, media
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...