×

என்னைப்போல பல கலைஞர்களுக்கு தந்தை, பிதாமகன், குரு பாலச்சந்தர் தான் : நடிகர் ரஜினிகாந்த்

சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழா: ரஜினிகாந்த், கமல், நாசர், மணிரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த பேசியது பின்வருமாறு,

*நேற்றும், இன்றும் கமலுக்கு மறக்க முடியாத நாட்கள்.நேற்று கமல் தனது தந்தையின் சிலையை பரமக்குடியில் திறந்து வைத்தார்.இன்று கமல் தனது கலையுலக தந்தையின் சிலையை திறந்து வைத்துள்ளார் - ரஜினி

*அரசியலுக்கு வந்த பிறகும் தாய்வீடான சினிமாவை கமல் மறக்கமாட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது.

*ராஜ்கமல் பிலிம்ஸ் எடுத்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அபூர்வ சகோதரர்கள்.அபூர்வசகோதரர்கள் படம் பார்த்து நள்ளிரவு நேரத்தில் கமல் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்து பாராட்டினேன்.

*ராஜ்கமல் பிலிம்ஸ் எடுத்த தேவர்மகன் திரைப்படம் ஒரு மிகப்பெரிய காவியம்.கமலின் ஹேராம் திரைப்படத்தை இதுவரை 30 முதல் 40 முறை பார்த்து உள்ளேன்.

*மார்லன் பிராண்டோவின் காட் ஃபாதர், சிவாஜியின் திருவிளையாடல் படத்திற்கு பிறகு அடிக்கடி ஹேராம் படத்தை பார்த்துள்ளேன்.

*பாலச்சந்தருக்கு மிக மிக பிடித்த குழந்தை கமல்ஹாசன் தான்.படப்பிடிப்பு தளத்தில் கமல் தூங்குவதை கூட பார்த்து ரசித்துக் கொண்டிருபபார் பாலச்சந்தர்.

*என்னைப்போல பல கலைஞர்களுக்கு தந்தை, பிதாமகன், குரு பாலச்சந்தர் தான்.

Tags : Rajinikanth ,Guru Balachander ,artists ,guru , Alivarpet, Director, Balachander, Statue, Actor Rajinikanth
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...