×

ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு தகவல் கொடுத்த 2 ராணுவ வீரர்கள் கைது

ஜெய்ப்பூர்: ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பெண் ஏஜெண்டுக்கு தகவல் கொடுத்த 2 ராணுவ வீரர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் பொக்ரானில் பணியாற்றி வரும் ரவி வர்மா, விசித்ர போக்ரா இவர்கள் இருவரும் வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ராணுவத்தி்ன் செயல்பாடுகள் பற்றி பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்கு தகவல் கொடுப்பதாக புகார்கள் வந்தன. இதுபற்றி ராணுவ அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ராணுவ வீரர்கள் இருவரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்த பெண் ஏஜென்ட் ஒருவருக்கு தகவல் அனுப்பியது உறுதியானது. இதனிடையே இரண்டு வீரர்களும் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது ஜோத்பூர் ரயில் நிலையத்தில் அவர்களை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இரு ராணுவ வீரர்களையும் இண்டர்நெட் குரல் அழைப்பு வழியாக ஐஎஸ்ஐ பெண் ஏஜென்ட் தொடர்பு கொண்டது விசாரணையில் உறுதியாகியுள்ளது. அந்த பெண் பேசிய விதம் பஞ்சாப் மக்கள் பேசுவது போன்று இருந்ததால் அவர் இந்தியர் என்று இருவரும் நம்பினர். அவருடைய வலையில் சிக்கிய இருவரும் ராணுவ தொடர்பான தகவல்களை பகிர்ந்தது தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட வீரர்களை இருவரையும் ஜெய்ப்பூருக்கு கொண்டு சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : army soldiers ,intelligence service ,Agent ,India ,Pakistan ,Armed Forces ,ISI , India, Armed Forces, ISI, Female Agent, Arrested
× RELATED அபிஷேக் நாமா இயக்கும் மாயாஜால படம் நாகபந்தம்