×

உலகம் முழுவதும் பருவநிலை அவசரநிலை : 11,000 விஞ்ஞானிகள் அறிவிப்பு

புதுடெல்லி : உலகம் முழுவதும் பருவநிலை அவசரநிலையை, 153 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பம் அதிகரிக்கிறது, பனி மலைகள் உருகுகின்றன, கடல் மட்டம் உயர்நது வருகிறது, பருவநிலை காலங்களும் மாறுகின்றன. காற்று மாசு அதிகரித்து, மக்கள் சுவாசிப்பதற்கு கூட சுத்தமான காற்று கிடைக்காத நிலை தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பருவநிலை மாற்ற அவசரநிலையை உலகம் முழுவதும் 153 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

‘பயோ சயின்ஸ்’ என்ற இதழில் பருவநிலை மாற்ற நிலவரம், அதற்கு நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தியாவைச் சேர்ந்த 69 விஞ்ஞானிகள் உட்பட, உலகம் முழுவதும் 11,258 விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எரிசக்தி பயன்பாடு, புவி வெப்பம், மக்கள் தொகை வளர்ச்சி, காடுகள் அழிப்பு, பனிமலை உருகுதல், பிறப்பு வீதம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, கார்பன் வாயுக்கள் வெளியேற்றம் ஆகியவை பற்றி கடந்த 40 ஆண்டுகளில் வெளியான புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து இவர்கள் பருவநிலை அவசரநிலையை அறிவித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தை தடுக்க மாசுவை அதிகப்படுத்தும் மனிதனின் செயல்பாடுகள் மாற வேண்டும் எனவும், இல்லையென்றால் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : Climate Emergency Around the World ,Scientists , Climate Emergency, Around the World,11,000 Scientists Announced
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு