×

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் படி, கொடைக்கானலில் செயல்பட்டு வந்த தனியார் படகு குழாமுக்கு சீல்

மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, கொடைக்கானல் படகு குழாமுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக திகழ்வது கொடைக்கானல் ஏரி. இந்த ஏரியில் சுமார் 5 படகு குழாம்கள் உள்ளன. அதில், 3 படகு குழாம்கள் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது. 2 குழாம்களை தனியார் எடுத்து நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கொடைக்கானலைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.  அதில், கொடைக்கானலில் செயல்பட்டு வரும் தனியார் படகு குழாம்கள் சுமார் 99 ஆண்டுகள் செயல்பட்டு வருகிறது. மேலும், தனியார் குழாம்களின் குத்தகை காலம் செப்டம்பர் 1ம் தேதியோடு முடிந்த போதிலும் அவற்றை அரசாங்கம் கையகப்படுத்தவில்லை.

இந்த குழாமில் சுமார் 150 படகுகள் இயக்கப்படுவதாகவும், ஆனால் அதன் முழு வருவாயை கொடைக்கானல் நகராட்சிக்கு காட்டாமல் முறைகேடு நடப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் பொது ஏலம் விட உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கொடைக்கானல் ஏரியில் தனியார் படகு போக்குவரத்தை நிறுத்தி  போட் கிளப்பை பூட்டி சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் அடிப்படையில், இன்று கொடைக்கானல் ஆணையர் தரப்பில் நகராட்சி அதிகாரிகள் 2 படகு குழாமிற்கும் சீல் வைத்தனர்.

Tags : branch ,ferry crew ,Kodaikanal , Kodaikanal, Private, Boat Board, Seal, ICort Madurai Branch, High Court Madurai Branch
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...