×

டெல்லி பாதிப்பை தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசு அதிகரிப்பு : தனியார் ஆய்வாளர்களின் தகவலால் பீதி

சென்னை: டெல்லியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசுபாடு அதிகரிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது ெபாதுமக்களிடத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பனிப்பொழிவு மற்றும் விவசாயப்பணிகள் காரணமாக காற்றில் அதிக அளவு மாசு கலந்துள்ளது. இது புகை மண்டலமாக மாறி கடந்த சில தினங்களாக மக்களை அவதியடையச்செய்து வருகிறது. எங்கும் புகைமண்டலமாக இருப்பதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதைக்கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அதிகாரிகள் குழு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு தீபாவளி பண்டிகையின்போது அதிக அளவு பட்டாசு வெடிக்கப்பட்டதும், அருகில் உள்ள பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய பொருட்கள் எரிக்கப்படுதும் காரணமாகும். இதன்காரணமாக பொதுமக்கள் பலர் அங்கிருந்து, பிற இடங்களுக்கு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு டெல்லியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையிலும் காற்று மாசு 2 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தொழில் சார்ந்து சென்னைக்கு இடம்பெயர்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. விமானங்கள் கூட தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. மக்கள் திக்குமுக்காடி வருகின்றனர். இப்படியிருக்கும் சூழ்நிலையில் தற்ேபாது ஆய்வு ஒன்றில் காற்று மாசு குறியீடு அதிக அளவில் உயர்ந்திருப்பதாக கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் காற்று மாசுபாடு தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள், தங்களது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு, கிழக்கு கடற்கரை வரை பரவும். அப்போது அது சென்னைக்கு வரவுள்ளது. மாசுப்புள்ளிகள் 200-300 வரை எட்டும். இதன்காரணமாக வானத்தில் புழுதி படலங்கள் காணப்படும். தெளிவாக பார்க்க முடியாத அளவுக்கு வானம் இருக்கும். மாசுபாட்டின் அளவு இன்றும், நாளையும் மேலும் அதிகரிக்கும்’ என்று கூறியுள்ளனர். ஏற்கனவே டெல்லியில் மாசு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையிலும் இப்பிரச்னை ஏற்படும் எனக்கூறுவது மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை மையம் மறுப்பு....

சென்னையில் காற்று மாசுபாடு ஏற்படும் என்று கூறுவதை வானிலை ஆய்வு மையம் முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த மைய அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லி மிக நீண்ட தூரத்தில் உள்ளது. அங்கிருந்து சென்னைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. பூமத்தியரேகையில் இருந்து நாம் 8-12 டிகரி அட்சரேகையில் இருக்கிறோம். ஆனால் டெல்லி 30 டிகிரி அட்சரேகையில் இருக்கிறது. அவ்வளவு தூரம் பயணம் செய்து காற்று மாசுபாடு சென்னைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. மேலும் கிழக்கு, வடக்கில் இருந்து மேகக்கூட்டங்கள் திரண்டு வந்து தமிழக பகுதியை சூழ்ந்து இருக்கின்றன. தொடர்ந்து அவை பயணித்து வருகிறது. அவை டெல்லியிலிருந்து வரும் மாசுவை தடுத்துவிடும். டெல்லி காற்று மாசுபாட்டால், சென்னைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்று கூறியுள்ளனர்.

டெல்லியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சென்னைக்கும் பரவும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் பருவமழை அதை தடுக்கும் என பலரும் தெரிவிக்கின்றனர். தற்ேபாது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், கிழக்கில் இருந்தும் வடகிழக்கில் இருந்தும் மேகக்கூட்டங்கள் தொடர்ந்து பரவி வருவதாக கூறப்படுகிறது. அவை காற்று மாசுபாட்டை தடுத்து, பாதுகாக்கும் என்ற தகவலையும் பலரும் கூறிவருகின்றனர்.

Tags : Chennai ,Delhi ,investigators , Air pollution increase , Chennai, Delhi impact
× RELATED வருங்காலங்களில் டெல்லியிலும்...