×

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி சசிகலாவை ஏமாற்றுகிறார் டிடிவி

திருவில்லிபுத்தூர்: சசிகலாவை டிடிவி.தினகரன் ஏமாற்றுகிறார் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:ரஜினிக்கு மத்திய அரசு வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது பொருத்தமானது. அவரது நடிப்பு, அவரது யதார்த்தமான பேச்சுக்கு கிடைக்கும் விருது இது. மத்திய அரசு காலம் தாழ்த்தி வழங்கினாலும், பொருத்தமான நபருக்கு  வழங்கியுள்ளது. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம், தவறில்லை. ஆனால், திரைப்படத்தில் நடிப்பதுபோல நிஜ வாழ்க்கையிலும் நடிக்கக் கூடாது.

 ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அரசியலில் வாய்ப்பு கிடைக்கும் என நடிகர்கள் அரசியல் பேசுகின்றனர். அதை சந்திக்க அதிமுக உள்ளது. அமமுக ஒரு கட்சியல்ல. அது ஒரு குழு. அங்கு யாரும் இருக்கமாட்டார்கள். டிடிவி.தினகரனின் கூடாரம்  காலியாக உள்ளது. அவர் ஒரு கலப்படவாத அரசியல்வாதி. சசிகலாவை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அதை தெரிந்து அமமுகவில் இருந்து, அனைவரும் விலகி வருகின்றனர். தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மட்டுமே போட்டி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.Tags : Rajendra Balaji ,Sasikala ,Rajendra Balaji DTV ,TTV , Interview ,Minister ,Rajendra Balaji ,Sasikala
× RELATED அதிமுகவை அமித்ஷா கைப்பற்றப்...