×

மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல் ஆட்டுக்குட்டி வரை.. விதவிதமான பிரசாரத்தால் களைகட்டிய தேர்தல்களம்..!!

விருதுநகர்: ஐஸ் தயாரிப்பு, காய்கறி விற்பனை, பிரச்சாரத்தில் கவனம் பெற்ற ஆட்டுக்குட்டி என்ற வேட்பாளர்களின் விதவிதமான பிரச்சாரத்தால் தேர்தல் களம் கலைக்கட்டியுள்ளது. விருதுநகரில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்தார். சிவகாசியில் ஐஸ் நிறுவன ஊழியர்களிடம் ஆதரவு திரட்டிய போது அங்கு ராஜேந்திர பாலாஜி ஐஸ் தயாரித்து கொடுத்து உற்சாக படுத்தினார். கோவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலா மணி காய்கறி சந்தையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்குள்ள கடையில் அமர்ந்து வாழை பழம் விற்பனை செய்து வியாபாரிகள், மக்களிடம் ஆதரவு திரட்டினார். பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் ஆட்டுக்குட்டியை சுமந்தபடி வந்த நபருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனால் அவரது பிரச்சாரத்தில் ஆட்டுக்குட்டியே முதன்மையாக பேசப்பட்டது. வேலூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் பசுபதி சைக்கிள் சிக்ஸவில் சென்ற வாறு வாக்கு வேட்டையில் ஈடுபட்டார். சேலம் தொகுதி பாமக வேட்பாளர் அண்ணாதுரை பேருந்து நிலையம் அருகே உள்ள கடை வீதியில் காய்கறிகளை விற்பனை செய்து ஆதரவு திரட்டினர்.

The post மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல் ஆட்டுக்குட்டி வரை.. விதவிதமான பிரசாரத்தால் களைகட்டிய தேர்தல்களம்..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,VIRUDHUNAGAR ,Former minister ,Rajendra Balaji ,DMDK ,Vijaya Prabhakaran ,Sivakasi ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு