×

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடாமல் அலட்சியம் கடும் தண்டனை அளிக்க தயக்கம் ஏன்?: பத்தாண்டு சிறை விதிக்க தனி சட்டம் வருமா?

இப்படி பல முக்கிய விஷயங்களில் அரசு அதிரடியாக புதிய சட்ட விதிகளை கொண்டு வரும் போது, உயிர்ப்பலி வாங்கும் ஆழ்துளை கிணறுகள் விஷயத்தில் கடுமையான சட்டத்தை ஏன் கொண்டு வரக்கூடாது? பச்சிளம் குழந்தைகள் பலியாவதை ஏன் நிரந்தரமாக தடுக்க கூடாது?ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தனி சட்டம் உள்ளது. கோர்ட்டுக்கே போகாமல் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். அப்படி, பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடாமல் விட்டு விடுவோருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர். கடந்த 2011ல் இருந்து பார்த்தால் பத்துக்கும் மேலாக ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் மூன்று குழந்தைகளை தவிர மற்ற பிஞ்சுகள் மீட்க முடியாமல் பலியாகின. 2014ம்  ஆண்டு மட்டும் மூன்று சம்பவங்கள் நடந்தன.

மறு ஆண்டே வேலூரில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது. இதையடுத்து, தமிழக அரசு ஆழ்துளை கிணறுகளை பராமரிக்க சில விதிகளை போட்டது. ஆழ்துளை கிணறு தோண்ட உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும்; கட்டணம் கட்ட வேண்டும் என்று போடப்பட்டதே தவிர, பயனற்ற குழிகளை மூடாமல் விட்டு செல்வோருக்கு கடும் தண்டனை அளிக்க வழியில்லை. இனியாவது இதை செய்யுமா அரசு? இதோ நான்கு விஐபி.க்கள் 4 கோணங்களில் அலசுகின்றனர்.

* போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் தண்டனை விதிக்க புதிய நடைமுறை விதிகள் அமலுக்கு வந்து விட்டது.
* பத்திரப்பதிவுகளில்  ஊழல்களை களைய ஆன்லைன் மயமாகி வருகிறது; இடைத்தரகர்கள் ராஜ்ஜியம் ஒடுக்கப்பட்டுள்ளது.
* ரேஷன் பொருட்களில் தில்லுமுல்லு அகல ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது.



Tags : bore wells , Disregarding ,impose, harsh punishment
× RELATED தஞ்சாவூரில் கோயில் குளத்தை தூர்வாரிய...