காளையார்கோவில் அருகே கண்டெடுப்பு: 350 ஆண்டுகள் பழமையான வாமனக்கல் உருவ கல்வெட்டு

காளையார்கோவில்: 350 ஆண்டுகள் பழமையான வாமனக்கல் உருவம் பொறித்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கொல்லங்குடி, வீரமுத்துப்பட்டி, செங்குளிவயல் பகுதிகளில் பழக்கால எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அப்பகுதிகளில் கொல்லங்குடியைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநரும், தொல்லியல் ஆய்வாளருமான புலவர் காளிராசா ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது கிடைத்த கல்லில் வாமன உருவம், ஒரு கையில் விரித்த குடை, மற்றொரு கையில் கெண்டி என்னும் மண்டலம், தலையில் கொண்டை, மார்பில் முப்புரிநூல் பொறித்த வாமன உருவம் காணப்படுகிறது. கல்லின் 2 பக்கங்களிலும் கல்வெட்டு எழுத்துக்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு 350 ஆண்டுகள் பழமையானது என புலவர் காளிராசா தெரிவித்தார்.

Tags : Kaliyarikovu ,Vamanakkal , In Kaliyariko, the Vamanakal image inscription
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்...