×

களப்பணியாளர்களுக்கு ரெயின்கோட்: மின்வாரியம் நடவடிக்கை

சென்னை: தமிழக மின்சாரவாரியத்தில் ஏராளமான களப்பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் புதிய மின்இணைப்பு வழங்குவது, பழுதை நீக்குவது, கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை துண்டிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழை பெய்யும் போது, இவ்வாறு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரெயின்கோட் வழங்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சரியாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதால், கோவை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சீரான மின்விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது.

அங்கு வாரியப்பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்போது ரெயின்கோட் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இங்கும் வழக்கம்போல் கோட்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தங்களது நலனை கருத்தில் கொண்டு ரெயின்கோட்டுகளை உடனடியாக வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Fieldworkers: Electricity Action ,Fieldworkers , Raincoat ,Fieldworkers, Electricity,Action
× RELATED ஊரடங்கில் சரியாக கவனிக்கவில்லை:...