×

தமிழகம் முழுவதும் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று கல்லறை திருநாள் அனுசரிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ பெருமக்களால் கடைபிடிக்கப்படும் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக்கு சென்று அவர்களை நினைவுகூர்வதற்கு வசதியாக ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதி ஆத்மாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் தங்களின் முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைக்கு செல்லும் கிறிஸ்தவ மக்கள் அதனை தூய்மைப்படுத்தி மாலைகள் அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்துவார்கள்.

அதன்படி நவம்பர் 2ம் தேதியான இன்று பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவ மக்கள் கல்லறை திருநாளை அனுசரித்து வருகின்றனர். தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் தங்கள் உறவினர்களின் கல்லறைகளை கழுவி சுத்தம் செய்து மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியும், பாடல்களை பாடி பின்னர் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்வதும், கண்ணீர் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

மேலும் இந்த தினத்தையொட்டி அங்கு வந்திருக்கும் ஏழைகளுக்கு கிறிஸ்தவர்கள் உதவி செய்வதும் வழக்கம். இதனை தொடர்ந்து திருச்சி வேர்ஹவுஸ், ஆர்.சி , எம்.சி மார்சிங்பேட்டை, கண்டோன்மென்ட் கல்லறை, உறையூர் கல்லறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களில் கல்லறைகளை சுத்தம் செய்து அஞ்சலி செலுத்தினர். மேலும் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி, ஊதுவர்த்தி போன்றவைகளை ஏற்றி தங்கள் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைவ வேண்டும் என பைபிள் வசித்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


Tags : cemetery ,Tamil Nadu , Tamil, Dead, Memorial, Cemetery Day, Adjustable
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...