சண்டிகர்: டிக்டாக் ஆப் மூலமாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு அரியானாவில் பிரபலமானவர் சோனாலி போகத். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ சார்பில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குல்தீப் பிஸ்னோயிடம் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், தனது சகோதரியும், அவரது கணவரும் குடும்ப பிரச்னையில் தன்னை தாக்கி மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து சோனாலியின் சகோதரி, அவரது கணவர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.