×

வேலூர் பெண்கள் சிறையில் நளினி 3வது நாளாக உண்ணாவிரதம்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் முருகனை கொடுமைப்படுத்துவதாக கூறி அவரது மனைவி நளினி நேற்று 3வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 18ம் தேதி சிறையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து முருகனுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் 3 மாதங்களுக்கு ரத்து செய்து, அவரை தனிச்சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் நளினி திடீரென சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாகவும், அவரது உயிரை காப்பாற்றவே நளினி கடந்த 26ம் தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இந்நிலையில், நளினி நேற்று 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனும் 9வது நாளாக உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சிறைத்துறையினர் தெரிவித்தனர்.


Tags : Vellore ,Nalini ,women ,jail , Vellore, women's jail, Nalini, fasting for 3rd day
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...