×

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

சென்னை: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் 30ம்தேதி பசும்பொன் கிராமத்துக்கு செல்கின்றனர். அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேவர் திருமகனாரின் 112-வது ஜெயந்தியை முன்னிட்டு வரும் 30ம்தேதி புதன் கிழமை காலை 9 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Chief Minister ,Mutharalinga Thevar Jayanti Festival ,Deputy Chief Minister ,Mutharalinga Thevar , Mutharalinga Thevar, Jayanti Festival, Chief Minister, Deputy Chief Minister, Participation
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு