×

மிகப்பெரிய பணக்காரர் பட்டம் பில் கேட்ஸிடம் இழந்தார் அமேசானின் ஜெப் பிஜோஸ்

சியாடெல்: அமேசானின் நிறுவனரும் அதன் செயல் அதிகாரியுமான (சிஇஓ) ஜெப் பிஜோஸ், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை இழக்கிறார். பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பில்கேட்ஸ். ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியானது. இதில், அதனுடைய வருவாய் குறைந்துள்ளது. இதனால், பங்குகள் முதலீட்டில் சுமார் 7 பில்லியன் டாலர் (ரூ.49,619 கோடி)  இழந்துள்ளார். கடந்த வியாழனன்று பிற்பகல் பங்குச்சந்தை வர்த்தகத்தில் அமேசானின் பங்குகள் விலை 7 சதவீதம் அளவுக்கு சரிந்தன. இதனால் அதன் நிறுவனர் ஜெப் பிஜோஸின் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் டாலராகக் குறைந்தது.  (ரூ.7,36,500 கோடி) அதேவேளையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸின் தற்போதைய சொத்து மதிப்பு 105.7 பில்லியன் டாலாக (ரூ.7,49,370 கோடி) உயர்ந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸின் தற்போதைய சொத்து மதிப்பு 105.7 பில்லியன் டாலர். பில்கேட்ஸ் 24 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை கடந்த 2018ல் முதல் முறையாக வசப்படுத்தினார்  ஜெப் பிஜோஸ். அப்போது அவரின் சொத்து மதிப்பு 160 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11,34,000 கோடி). இந்த நிதியாண்டில் மூன்றாவது காலாண்டில் அமேசான் நிறுவனத்தின் நிகர வருவாய் 26 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. பில் கேட்ஸ் கடந்த 1987ம் ஆண்டுதான்  போபரஸின் பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றார். அப்போது அவரின் சொத்து மதிப்பு 1.25 பில்லியன் டாலாக இருந்தது. . அதேபோல், போபர்ஸின்  அமெரிக்க பணக்காரர்–்  பட்டியலில்  கடந்த 1998ல் இடம்பெற்றார்ஜெப் பிஜோஸ். அப்போது அவரது சொத்து மதிப்பு 1.6 பில்லியன் டாலர். ஜெப் ஜோஸ் தம்பதியினர் கடந்த ஏப்ரலில் தங்களது விவாகரத்து முடிவை இறுதி செய்்தனர்.  ஜெப் பிஜோஸ் 36 பில்லியன்  டாலர் மதிப்புள்ள பங்குகளை (சுமார் ரூ.2,55,000 கோடி) ஜீவனாம்சமாக மனை மாக்கென்ஸி பிஜோஸிக்கு வழங்கியுள்ளார். 


Tags : Jeb Pjos ,Bill Gates ,Amazon , Rich's Degree, Bill Gates, Amazon's Jeb Pjos
× RELATED வீடியோ வெளியிட்டது ‘ப்ளூ ஆரிஜின்’...