உதகை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதகையில் எல்க்ஹிஸ் என்ற இடத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2017-ல் சேதுரகுபதி கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், சேதுரகுபதிக்கு 38 ஆண்டு சிறை மற்றும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.