×

கொடுங்கையூரில் வெள்ளை காகம்

பெரம்பூர்: சின்ன கொடுங்கையூரில் இருந்த வெள்ளை காகத்தை பார்க்க மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.சென்னை சின்ன கொடுங்கையூர் சீதாராமன் நகர் 7வது தெருவில் நேற்று காலை ஏராளமான காகங்கள் இருந்தன. இதன் நடுவே வெள்ளை நிறத்தில் ஒரு பறவை இருந்ததால் ஆச்சரியம் அடைந்த அப்பகுதி மக்கள் அருகே சென்று பார்த்தனர்.  அப்போது அது வெள்ளை நிற காகம் என்பது தெரியவந்தது.

இதுபற்றிய தகவல் பரவியதும் அப்பகுதியை சேர்ந்த பெரியவர்களும், சிறுவர்களும் வெள்ளை காகத்தை வேடிக்கை பார்க்க திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் கொல்லிமலை மற்றும் பச்சை மலை பகுதிகளில் வெள்ளை  காகம் உள்ளது என்று தெரிகிறது. தற்போது கொடுங்கையூரில் வெள்ளை காகம் காணப்பட்டது பார்வையாளர்களை கவர்ந்தது.




Tags : Kodungaiyur. ,Kodungaiyur White , Kodungaiyur, White crow
× RELATED கேடுகளுக்கு வழிவகுக்கும்...