×

புதுச்சேரியில் பைனான்சியரை தாக்கிவிட்டு ரூ.3 லட்சம் வழிப்பறி: மர்மநபர்களுக்கு போலீசார் வலை

புதுச்சேரி: புதுச்சேரியில் பைனான்சியரை தாக்கிவிட்டு ரூபாய் 3 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பி சென்ற மர்ம நபர்களை  போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சிவராந்தகம் ஏரி அருகே சென்று கொண்டிருந்த பைனான்சியர் ரமேஷ் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கி அவரிடமிருந்து ரூபாய் 3 லட்சத்தை வழிப்பறி செய்தனர். ரமேஷை அரிவாளால் வெட்டிவிட்டு, அவரிடமிருந்து ரூபாய் 3 லட்சம் பணத்தை பறித்து கொண்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். தொடர்ந்து  படுகாயம் அடைந்த ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : financiers ,Puducherry ,accountants ,attack , Puducherry, Financiers, Rs 3 Lakhs, wayward, mysterious, police, web
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!