×

800 கிலோ புகையிலை பதுக்கிய பாஜ ஒன்றிய செயலாளர் கைது

விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அடுத்த காடல்குடி அருகே கந்தசாமிபுரத்தில் உள்ள குடோன் மற்றும் அதனருகே நின்றிருந்த மினிலாரி ஆகியவற்றை சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனையிட்டனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 65 மூட்டைகளில் சுமார் 800 கிலோ வரை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், குடோன் உரிமையாளரான பழனிமுருகன் (45) உட்பட 4 பேரை கைது செய்தனர். இதில் பழனி முருகன், பாஜ புதூர் ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 800 கிலோ புகையிலை பதுக்கிய பாஜ ஒன்றிய செயலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP union ,Vlathikulam ,Kandasamipuram ,Kadalkudi ,Vlathikulam, Thoothukudi district ,BJP ,
× RELATED காதணி விழா முடிந்து கடலில் குளித்த சிறுமி உட்பட 2 பேர் பலி