×

ரியோ துறைமுகம்

நன்றி குங்குமம் முத்தாரம்

உலகில் இயற்கையாகவே தோன்றிய ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கொண்டாடப் படுகிறது ரியோ துறைமுகம். பிரேசிலின் மத்தியில் வீற்றிருக்கும் இதனை குனாபரா விரிகுடா என்றும் அழைக்கின்றனர். பல நூறு வருடங்களாக அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட அரிப்பின் காரணமாக இது உருவாகியிருக்கிறது. கடற்கரைகளும், மலைகளும், ஏரிகளும், வெப்பமண்டலக் காடுகளும் அப்பப்பா கண்கொள்ளாக் காட்சிதான். “நவரத்தினங்களை வாரி இறைத்தாற்போல் கவர்ந்திழுக்கும் ரம்மியமான இயற்கை காட்சிகள் எல்லாப் பக்கமும் கொட்டிக்கிடக்க, எந்தப் பக்கம் முதலில் பார்ப்பது! தீர்மானிப்பது கஷ்டமே” என அந்நாட்டை சுற்றிப் பார்த்த ஒருவர் வியந்தார். ரியோ டி ஜெனிரோ, அல்லது வெறுமனே ரியோ, உலகிலுள்ள மிக அழகிய நகரங்களுள் ஒன்றாக அநேகரால் கருதப்படுகிறது.

“ரியோ” என்ற பதத்தின் அர்த்தம் “ஆறு.” ஆனால், இந்நகரமோ வளைகுடா மீது கம்பீரமாக வீற்றிருக்கிறது. இந்தத் துறைமுகத்தைச் சுற்றிலும் அழகழகான மலைகள் அரண்களாக அமைந்திருக்கின்றன. இதன் நீளம் 31 கி.மீ. அகலம் 28 கி.மீ. சுமார் 100 தீவுகள் இந்தத் துறை முகத்துக்குள் இருக்கின்றன. ஹெலிகாப்டரில் பறந்துகொண்டே இதை ரசிப்பது பேரனுபவம். அப்படி பறந்துகொண்டே குனாபராவைப் பார்க்கும்போது இது ஏன் அதிசயம் என்று சொல்லப்படுகிறது என்பதை உணரலாம் என்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

Tags : Rio , rio de janeiro
× RELATED பராசக்தி திரைப்படமும் தமிழ்நாட்டில்...