×

பாரிமுனை பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி : பொதுமக்கள் பீதி

தண்டையார்பேட்டை: பாரிமுனை மண்ணடி சைவ முத்தையா தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர் (40). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பவானி (35). இவர்களது ஒன்றரை வயது மகள் பூர்ணிமாவுக்கு கடந்த 3 நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை பூர்ணிமா இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் சுகாதார சீர்கேட்டால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் குழந்தை இறந்திருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே, சுகாதாரத்துறையும், மாநகராட்சியும் மர்ம காய்ச்சல் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : baby girl , Mystery fever, kills baby girl
× RELATED மதுரையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு