×

கிழக்கு மத்திய அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகும்: அடுத்த 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: கிழக்கு மத்திய அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளளது. லட்சத்தீவு மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


Tags : East Central Arabian Sea , Thunderstorm, East Central, Arabian Sea ,next 24 hours
× RELATED காரைக்குடி அருகே இடியும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம்