×

6 பேர் கொலையில் போலீசில் சிக்கினால் தற்கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஜோளி: வீட்டில் நடந்த சோதனையில் சயனைடு சிக்கியது

திருவனந்தபுரம்: கேரளாவில் சொத்துக்காக கணவர், மாமனார் உள்பட 6 பேரை கொடூரமான முறையில் கொலை செய்த பெண் வீட்டில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். இதில்  சயனைடு பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியைச் சேர்ந்தவர் ராய்தாமஸ். இவரது மனைவி ஜோளி. கடந்த 2002 முதல் 2016க்கு உள்பட்ட கால கட்டத்தில் கணவர் ராய் தாமஸ், அவரது தந்தை டோம் தாமஸ், தாய் அன்னம்மா  உள்பட 6 பேரை அடுத்தடுத்து கொடூரமான முறையில் ஜோளி கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் ஜோளி, அவரது உறவினர் மேத்யூ, நகைக்கடை ஊழியர் பிரஜிகுமார் ஆகிய 3 பேரை  கைது செய்தனர்.கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில் கைதான ஜோளி, மேத்யூ, பிரஜிகுமார் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக 6 பேர் கொலை  செய்யப்பட்ட 4 இடங்களுக்கு 3 பேரையும் போலீசார் அழைத்து சென்றும் விசாரித்தனர். இந்த விசாரணையின் முடிவில் 6 பேரையும் கொலை செய்ததை ஜோளி ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 5வது நாளாக போலீசார் ேஜாளியிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது கூடத்தாயியில் உள்ள வீட்டில் முக்கியமான ஒரு பொருளை மறைத்து வைத்திருப்பதாக கூறி உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து  விசாரணை நடத்தினர். அப்போது போலீசில் சிக்கினால் தானும் சயனைடு தின்று தற்கொலை செய்ய தீர்மானித்திருந்ததாகவும், அதற்காக சயனைடை வாங்கி வீட்டில் வைத்திருப்பதாகவும் ஜோளி கூறியுள்ளார். இதையடுத்து  இரவோடு இரவாக போலீசார் ஜோளியை  அழைத்து கொண்டு கூடத்தாயியில் உள்ள வீட்டுக்கு சென்றனர். பின்னர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது சமையல் அறையில் பாத்திரங்களுக்கு இடையே ஒரு சிறிய பாட்டிலில் சயனைடு இருந்ததை ேபாலீசார் கண்டு பிடித்தனர். இதையடுத்து போலீசார் சயனைடு பாட்டிலை பறிமுதல் செய்தனர். அந்த பாட்டில் துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்தது. சயனைடு பாட்டில் போலீஸ் கையில் சிக்கியது போலீசாருக்கு கிடைத்த முக்கிய துருப்பு சீட்டாக கருதப்படுகிறது.
ஜோளி, அவருக்கு உதவிய உறவினர் மேத்யூ, நகைக்கடை ஊழியர் பிரஜிகுமார் ஆகிய 3 பேரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. ஆகவே போலீசார் மீண்டும் அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் கூடுதல் நாட்கள் கஸ்டடி கேட்டு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags : Jolie ,suicide , 6 killed, Jolie, , police, said:
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...