பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம்: நாடு முழுவதும் 16ம் தேதி நடக்கிறது

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய முகவர்கள் சங்கம் (எல்ஐசி) சார்பில் நாடு தழுவிய அளவில் கோட்ட அலுவலகங்கள் முன்பு நாளை (16ம் தேதி) தர்ணா போராட்டம் நடக்கிறது. சென்னை கோட்ட அலுவலகம் முன்பு சங்க தலைவர் நாகலிங்கம் தலைமையில்  நடக்கிறது. இந்த போராட்டத்தில், எல்ஐசி முகவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் வழங்குவது, குழு காப்பீட்டை 25 லட்சமாக உயர்த்துவது,  காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் காலக்கெடுவை 5 ஆண்டுகளாக உயர்த்துவது, எல்லா முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு, சிபிஎப், குடும்ப நல நிதி வழங்குவது, எல்லா பாலிசி சேவைகளுக்கும் அக்னாலஜ்மென்ட் வழங்குவது, ஐஆர்டிஏ  பரிந்துரைத்துள்ள கமிஷன் விகிதங்களை வழங்குவது, நேரடி வணிகத்தை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை எல்ஐசி நிர்வாகம் நிறைவேற்ற வலியுறுத்துகின்றனர். அதேபோன்று, எல்ஐசி பாலிசிகள் மீதான ஜிஎஸ்டியை நீக்குவது, தனியார் மய தாராள மயத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>