×

விமானப்படையில் ஏர்மேன் பணி கோவையில் அக்.17 முதல் 21 வரை தேர்வு முகாம்

சென்னை: இந்திய விமானப்படையின் ஏர்மேன் பணிக்கான ஆட்கள் சேர்ப்பு முகாம் கோவையில் அக்.17 முதல் 21 வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கை :  இந்திய  விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான தேர்வு முகாம், கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தில்  அக்டோபர் 17 முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கலந்து கொள்ள விரும்பும் பட்டதாரிகள் 1995 ஜூலை 19 முதல் 2000 ஜூலை 1க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். முதுநிலை பட்டம் பெற்றோர் 1992  ஜூலை முதல் 2000 ஜூலை 1 க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும். அக்டோபர் 17ம் தேதி  தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்தவர்களுக்கும், அக்டோபர் 21ம் தேதி கேரளா, லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தேர்வு நடைபெறும்.

ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு இயற்பியல், உளவியல், வேதியியல், கணிதம்,  ஐடி, கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய பாடத்தில் பி.எஸ்சி அல்லது பிசிஏ படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மற்றும் 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதைப்ேபான்று எம்.ஏ அல்லது எம்சிஏ படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.  மற்றும் 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முகாமில் கலந்துகொள்வோர் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். அசல் சான்றிதழ்கள் கல்லூரியில் இருந்தால், அதுகுறித்துகல்லூரி முதல்வரின் சான்றிதழுடன் கூடிய சுயகையொப்பம் இட்ட நகல் சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். இதைத்தவிர்த்து 044-22390561 அல்லது 044-22395553 என்ற தொலைபேசி எண் மற்றும் co.8asc-tn@gov.in என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Airmen ,Air Force Airmen Workout Camp ,Air Force , Airmen ,Air Force , October 17 to 21
× RELATED மலையடிவாரத்தில் ஐஎன்எஸ் ராஜாளி...