×

தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் : டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழக டிஜிபி திரிபாதி நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருச்சி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவில் இருந்த கென்னடி பெரம்பலூர் சப்-டிவிஷன் டிஎஸ்பியாகவும், பெரம்பலூர் சப்-டிவிஷனில் இருந்த ரவிந்திரன் திருச்சி ஸ்ரீரங்கம் உதவி கமிஷனராகவும், அரியலூர் மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவில் இருந்த இளங்கோவன் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருமால் விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளி டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவில் இருந்த ஆறுமுகம் திருநெல்வேலி நகர உதவி கமிஷனராகவும், திருநெல்வேலி நகர உதவி கமிஷனராக இருந்த நாகசங்கரன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிஎஸ்பியாகவும், விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் டிஎஸ்பியாக இருந்த வேணுகோபால் மதுரை சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராகவும், மதுரை நகர சட்டம் ஒழுங்கில் இருந்த வெற்றிச்செல்வன் மதுரை நகர வரதட்சணை தடுப்பு பிரிவு உதவி கமிஷனராகவும்,

மதுரை வரதட்சணை தடுப்பு பிரிவில் இருந்த வினோஜ் மதுரை அண்ணாநகர் உதவி கமிஷனராகவும், சேலம் சிசிஐடபல்யூ-சிஐடியில் இருந்த ரவி திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவும், நாமக்கல் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் இருந்த ராஜூ கோவை சிபிசிஐடி டிஎஸ்பியாகவும்,  திருநெல்வேலி நகர குற்றப்பிரிவில் இருந்த பீட்டர் பால் துரை கன்னியாகுமரி மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவில் இருந்த ராமமூர்த்தி தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் டிஎஸ்பியாகவும்,  தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமத்தில் இருந்த பிரகாஷ் சென்னை தலைமையிட சில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும்,  மதுரை மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை கழகத்தில் இருந்த புருசோத்தமன் சென்னை பூந்தமல்லி 13வது பட்டாலியன் உதவி கமிஷனராகவும், நாகை மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவில் இருந்த  திருமேனி அரியலூர் சப்-டிவிஷன் டிஎஸ்பி என தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : TSPs ,DGP Tripathi ,Tamil Nadu , 18 TSPs transferred,Tamil Nadu, DGP Tripathi directive
× RELATED சாத்தான்குளம் காவல் துணை...