அரசு மகளிர் ஐடிஐயில் சேர நாளை கடைசி

சென்னை: கிண்டி அரசினர் மகளிர் ஐடிஐயில் சேர நாளை கடைசிநாள் என சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை கலெக்டர் சீத்தாலட்சுமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2019 ஜூலை மாதம் நடைபெற்ற அரசினர்  தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கிண்டியில் உள்ள பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 8 தொழிற்பிரிவுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு வாய்ப்பு தரும் விதமாக நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த  தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவிகள் நாளைக்குள் (11ம் தேதி) தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக பயிற்சியில் சேரலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government ITI ,Government , Government Women ITI
× RELATED கோயில் நடை இன்று திறப்பு சபரிமலையில்...