×

மின் இணைப்பு கட்டணத்தை 300% உயர்த்துவதா?: டிடிவி.தினகரன் கண்டனம்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:வீடுகள், கடைகள் ஆகியவற்றுக்கான மின் இணைப்பு கட்டணம், மீட்டர் வைப்புத்தொகை உள்ளிட்ட கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. பல்வகை மின்இணைப்பு கட்டணம் 1,600லிருந்து 6,400ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மின்சார கட்டணங்களையும் பெரிய அளவிற்கு உயர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகும். இணைப்புக்கான கட்டணத்தை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து குறைப்பதற்கு் பதிலாக ஒன்றரை லட்சமாக உயர்த்தி இருப்பது அரசுக்கு எதன் பேரிலும் அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது. மின் இணைப்பு கட்டண உயர்வை பழனிசாமி அரசு மொத்தமாக திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DDV.Dinakaran ,DTV.Dinakaran , Electrical ,connection, DTV.Dinakaran ,condemns
× RELATED மேகதாது அணை கட்ட முயற்சிக்கும்...