×

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக 2.40 லட்சம் மோசடி

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் பாண்டியன் நகர் பல்லவன் தெருவை சேர்ந்தவர் மலர் (47). இவர், கண்ணகிநகரில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடு பெறுவதற்கு முயற்சித்து வந்தார். இதை தெரிந்து கொண்ட கண்ணகி நகரை சேர்ந்த மோகன், காசிநாதன், கந்தன் ஆகியோர், அந்த குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக மலரிடம் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளனர். இதையடுத்து மலர், அவர்களிடம் வீடு வாங்குவதற்கு 2.40 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர்கள், மலருக்கு வீடு கிடைத்து விட்டதாக அரசு ஒதுக்கீட்டு ஆணை மற்றும் ஆவணங்களை  வழங்கியுள்ளனர்.

அந்த உத்தரவுடன், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு அலுவலகத்துக்கு மலர் சென்றபோது, அந்த உத்தரவு போலியானது என்பது அறிந்து மலர் அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து மலர், கண்ணகிநகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார்.  புகாரின் அடிப்படையில் போலீசார் கண்ணகி நகரைச் சேர்ந்த மோகன், காசிநாதன், கந்தன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags : house ,cottage replacement board , 2.40 lakhs fraudulent , buy a house , cottage replacement board
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்