×

காவல்துறையில் தொழில்நுட்ப பொருட்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல் குறித்து அரசு விசாரிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

கும்பகோணம்: ‘‘தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப பொருட்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அதுபற்றி அரசு அரசு விசாரிக்க வேண்டும்’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.கும்பகோணத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பிரதமர் மோடி, ஐநா சபையில் பேசி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஒட்டுமொத்த தமிழர்களையும் தலைநிமிர வைத்துள்ளார். எனவே தமிழக சட்டமன்றத்தில் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறித்து இதுவரை பாஜ எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப பொருட்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அதுபற்றி அரசு அரசு விசாரிக்க வேண்டும். மோடி பிரதமரான பிறகு பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. சின்ன சரிவு என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதை சரி என்று கருத முடியாது. மோடி பற்றி தேவையற்ற வார்த்தைகள் வராமல் இருப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : government ,Pon.Radhakrishnan , 350 crore corruption , procurement , technical , Pon.Radhakrishnan
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை