×

அம்மா உணவகத்தில் பணியாற்றும் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 4000 ஊழியர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ: சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை : அம்மா உணவகத்தில் பணியாற்றும் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 4000 ஊழியர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் முக்கிய மருத்துவமனைகளில் தற்போது 400 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதில் நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிஎப் மற்றும் இஎஸ்ஐ திட்டங்களை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி, மாநகர நல அலுவலர் செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறியதாவது :
சென்னை மாநகராட்சியில் 400க்கு மேற்பட்ட அம்மா உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்கள் 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த 4000 பெண்கள் இந்த உணவகங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 300 ஊதியமாக வழங்கப்படுகிறது. ஒரு உணவகத்தில் பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழு தலைவருக்கு ஊதிய தொகை அனுப்பி வைக்கப்படும். அவர்கள் மற்ற ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்குவார்கள்.

இந்நிலையில் அம்மா உணவத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு பிஎப் மற்றும் இஎஸ்ஐ உள்ளிட்ட சலுகைகளை அளிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஊழியர்களுக்கு பிஎப் மற்றும் இஎஸ்ஐ வழங்க முடியுமா என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் இது தொடர்பான சாத்திய கூறுகளை ஆராயவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சென்னை மாநகராட்சியில் 400க்கு மேற்பட்ட அம்மா உணவகங்கள் உள்ளன. இதில் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த 4000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

Tags : PF ,ESI ,Chennai Corporation ,The Mother Self Help Group , PF, ESI: Chennai,Corporation Project , 4000 employees , Mother Self ,Help Group
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!